புத்தளம் நகரினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சூழலில் கரிசனை காட்டும் அமைப்பான மிஷன் க்ரீன் ஸ்ரீ லங்கா அமைப்பின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் புத்தளம் மன்னார் வீதி ஷங்கர் வரவேற்பு மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
மிஷன் க்ரீன் ஸ்ரீ லங்கா அமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களாக புத்தளம் மாவட்டத்தின் சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக "towatds peace with nature" என்ற தூரநோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.
குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவின் சிரேஷ்ட பேராசிரியரும், தேசிய அறிவுசார் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் சன்தன அபேரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மிஷன் கிரீன் ஸ்ரீலங்காவின தலைவர் சப்ரீன் அஹமதினால் அமைப்பின் நோக்கம் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை உள்ளடக்கிய வரவேற்புரை, 2019 தொடக்கம் தற்போது வரையான விஷேட தொகுப்புகளை வெளிப்படுத்தும் காணொளி போன்றனவும் சமர்ப்பிக்கப்பட்டன.
வருடாந்த பொதுக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வான சிறப்புரை பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
"இளைஞர்கள் விழிப்புணர்வு வழங்குவதை போலவே தொடர்ந்தும் சூழலை பாதுகாக்கும் செயல் திட்டங்களை வினைத்திறனாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறான அமைப்புகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எமது நாட்டின் நிலைத்திருக்கக்கூடிய எழுச்சிக்கு பங்களிக்க கூடும்" என அவரது உரையில் தெரிவித்தார்.
பேராசிரியர் அவர்களுக்கு அமைப்பின் தலைவரினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மிஷன் க்ரீன் ஸ்ரீலங்காவின் புதிய மைல் கல்லான missiongreensl.org இணையத்தளம் அதிதியினல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அடுத்து, Mission Green SriLanka வின் புதிய தலைவர் Sajeed Ahamed அவர்களின் தலைவர் பதவி ஏற்கும் நிகழ்வு மற்றும் புதிய தலைவரின் கன்னி உரை என்பன இடம்பெற்றன .
இறுதி நிகழ்வாக ,புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அறிமுகம் இடம்பெற்றதோடு நன்றி உரையுடன் வருடாந்த பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.