நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!


கொரோனா அதிகரிப்பு காரணமாக நாட்டை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதற்கமைவாக அனர்த்த நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.


எந்த வகையிலும் நாட்டை முடக்குவதற்கும், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் அவற்றை வரையறுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ளார்.இருப்பினும் பொதுமக்கள் ஒன்றுகூடும் வைபவங்களை வரையறுக் குமாறு ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post