ஸஹ்ரானின் வகுப்பில் இருந்த மேலும் மூவர் கைது! மனைவி மாமனார் உள்ளடக்கம்!

ஸஹ்ரானின் வகுப்பில் இருந்த மேலும் மூவர் கைது! மனைவி மாமனார் உள்ளடக்கம்!


அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துக்கொண்டதாக பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் மாமனார் உட்பட மூவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 


ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது உதவியாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் அடிப்படைவாத வகுப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய இத்தகைய வகுப்புகளை நடத்தியதாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இந்த அடிப்படைவாத வகுப்புகளில் கலந்து கொண்டதாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டி – கெக்குணுகொல்ல பகுதியில் வைத்து நேற்று (22) பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். 40, 52 மற்றும் 55 ஆகிய வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்களுள் பயங்கரவாதி ஸஹ்ரானின் மனைவியின் தந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சந்தேக நபர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.