எச்சரிக்கை : எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அவதானம்!

எச்சரிக்கை : எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அவதானம்!

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும் உயர்வடைந்துவரும் நிலையில் , அதனை தடுக்கும் முயற்சிகளில் அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருப்பதால், அடுத்த சில நாட்களில், குறிப்பாக வரவிருக்கும் வார இறுதியில் பயணங்களை இரத்து செய்யுமாறு இராணுவத் தளபதி சவேந்திரசில்வா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஏழு முதல் பத்து நாட்களில் பொதுமக்களின் செயற்பாடு காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் மூன்று வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை முக்கியமானதாக இருப்பதானல் அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் அமல்படுத்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆரோக்கியத்தை மீறும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.