நடிகர் விவேகின் நிலைமை கவலைக்கிடம்! வைத்தியர்கள் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடிகர் விவேகின் நிலைமை கவலைக்கிடம்! வைத்தியர்கள் தெரிவிப்பு!


நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை வட பழனியில் இருக்கும் SIMS வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தான் விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.


அதனால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பலரும் பேசுகிறார்கள். இந்நிலையில் விவேக்கின் உடல்நலம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. அந்த சந்திப்பில் சுகாராதத்துறை செயலாளரான டொக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.


அந்த சந்திப்பில் மருத்துவர் கூறியதாவது,


சுயநினைவில்லாமல் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார் விவேக். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து, ஆஞ்சியோபிளாஸ்டி செய்து, எக்மோ சப்போர்ட்டில் இருக்கிறார்.


தற்போது அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 24 மணிநேரம் கழித்து தான் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க முடியும். அவரின் பிபி தற்போது சீராக இருக்கிறது. விவேக்கிற்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், கொவிட் தடுப்பூசி போட்டதற்கும் தொடர்பு இல்லை.


இந்த வைத்தியசாலையில் 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறோம். யாருக்கும் மாரடைப்பு ஏற்படவில்லை. விவேக்கிற்கு இதய பிரச்சனை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.


ராதாகிருஷ்ணன் கூறியதாவது,


நல்லெண்ணத்தில் தான் விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவரின் சிரித்த முகம் தான் நினைவுக்கு வருகிறது. நான் மன வேதனையில் இருக்கிறேன். விவேக்கிற்கு கொவிட்டுக்கான அறிகுறி எதுவும் இல்லை. இது தடுப்பூசி பற்றி பேச வேண்டிய நேரம் இல்லை. விவேக் இதய நோயில் இருந்து குணமடைய வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம் என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.