நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, இன்று (16) மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், மேல் மற்றும் தென் பகுதி கடற்கரை பகுதிகளில் நாளை காலை அளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளைகளில் பனி மூட்டமான நிலைமை காணப்படும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், மழையுடன் மின்னல் தாக்கங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கமைய, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும், இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மழை மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.