வக்பு சபை விடுத்துள்ள விசேட அறிக்கை - பள்ளிவாயல்களில் ஒன்று கூடுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வக்பு சபை விடுத்துள்ள விசேட அறிக்கை - பள்ளிவாயல்களில் ஒன்று கூடுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்!!!!

ஒரு நேரத்தில் பள்ளியில் ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது என வக்பு சபை இன்று (24) சனிக்கிழமை அறிவித்தது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சரினால் நேற்று (23) வெளியிடப்பட்ட பொது நடவடிக்கைகள் தொடர்பான மாற்றப்பட்ட வரையரைகளைக் கருத்தில் கொண்டு, வக்பு சபை இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரபினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் / பொறுப்பாளர்களுக்கும்

பள்ளிவாயல்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19 வழிகாட்டல்கள்:

23.04.2021 திகதியிடப்பட்ட ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்ட பொது நடவடிக்கைகள் தொடர்பான மாற்றப்பட்ட வரையரைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை வக்பு சபை பின்வரும் வரையரைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்துப் பள்ளிவாயல்களையும் பணிக்கின்றது:

1. ஒரு நேரத்தில் பள்ளியில் ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 50 நபர்களாக இருக்க வேண்டும்.

2. குறிப்பிட்ட 50 நபர்களை தெரிவு செய்யும் முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.

3.எல்லா நேரங்களிலும் முகக் கவசம் (face mask) கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும்.

4. எல்லா நேரங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவது கட்டாயமாகும்.

5. எல்லா நேரங்களிலும் தொழுகை விரிப்பைப் பாவிப்பது கட்டாயமாகும்.

6. வீட்டில் வுழூ செய்து கொண்டு வரல் வேண்டும். வுழூ செய்யும் பகுதி மூடி வைக்கப் படல் வேண்டும்.

7. சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து நெறிமுறைகளும் வக்பு சபையின் முன்னைய பணிப்புரைகளும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்படல் வேண்டும்.

8. தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட சகல பகுதிகளிலும் அனைத்து பள்ளிவாயல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

9. அமைச்சரின் உத்தரவுப் பிரகாரம் மேலுள்ள வரையறைகள் 31.05.2021 வரையில் அமுலில் இருக்கும்
.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.