இப்போது இந்தியா பெயரை கேட்டாலே.. பதறியடித்து ஓடும் உலக நாடுகள்.. ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா தொற்றாளர்!

இப்போது இந்தியா பெயரை கேட்டாலே.. பதறியடித்து ஓடும் உலக நாடுகள்.. ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா தொற்றாளர்!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கான விமான சேவையை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

அடுத்த 30 நாட்களுக்கு இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கனடா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கட்டுக்கடங்காமல் மிக அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் முதலிடம் வகித்து வந்த அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.32 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2263 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருவதால் பல்வேறு பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவே பதறுகின்றன. இந்தியாவின் பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மக்கள் அஞ்சும் நிலையில்தான் இந்திய இருக்கிறது.

இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான விமான சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.