மாவட்டங்கள் அடிப்படையில் நேற்றைய கொரோனா நிலவரம்!

மாவட்டங்கள் அடிப்படையில் நேற்றைய கொரோனா நிலவரம்!

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 793 பேரில் 226 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 82 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 71 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 61 பேர், களுத்துறை மாவட்டத்தில் 52 பேர், கண்டி மாவட்டத்தில் 47 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 45 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 44 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 30 பேர், புத்தளம் மாவட்டத்தில் 28 பேர், வவுனியா மாவட்டத்தில் 22 பேர், அம்பாறை மாவட்டத்தில் 14 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 11 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 10 பேர், திருகோண மலை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 08 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 06 பேர், நுவ ரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 03 பேர் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 02 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.