தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு - பரபரப்பு சம்பவம்!

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு - பரபரப்பு சம்பவம்!

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் அந்தப்பெண்ணுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று
வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த பெண் இரணைமடு விமானப்படை தனிமைப் படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்
ணுக்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்
கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்தார்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த எம்.இசற்.எம்.எச். பாத்திமா சியானா (வயது 47) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்
ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post