ரயில்வே தண்டவாளத்தில் புகைத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட உயர்தர மாணவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

ரயில்வே தண்டவாளத்தில் புகைத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட உயர்தர மாணவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

ரயில்வே தண்டவாளத்தில் புகைத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட உயர்தர மாணவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கற்பதற்கு செல்வதாகக் கூறி, அங்கு செல்லாது மட்டக்களப்பு கூளாவடி பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் புகைத்தலில் ஈடுபட்டுக் கெண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் 6 பேரை பொலிஸார் பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று பெற்றோரை வரவழைத்து எச்சரித்த விடுவித்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ரயில் தண்டவாளப்பகுதியில் புகைத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களை சுற்றிவளைத்தபோது அவர்களில் பல மாணவர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் 6 பேரை பிடித்தனர்.


இவர்கள் மாமாங்கம், புன்னைச்சோலை, அதிகாரி வீதி, பார்வீதி போன்ற பகுதிகளிருந்து பாடசாலைக்கு செல்வதாகவும் தனியார் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறி கல்வி கற்பதற்கு செல்லாது குறித்த ரயில் தண்டவாளப்பகுதில் ஒன்று கூடி புகைத்தல் ஈடுபட்டுள்ளனர்.


இவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பிள்ளைகள் தொடர்பாக பொற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுரைகள் கூறி அவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


-கனகராசா சரவணன்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.