
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சடலங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ரீ.சரவனராஜா நேற்று (01) மாலை 6.00 மணியளவில் பார்வையிட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
இதன்போது நீதவான் ரீ. சரவனராஜா முன்னிலையில் உயிரிழந்தவர்களின் ஆறு வயது மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து நாயை கூப்பிடும் போது அப்பா கதவை திறந்தார் என்றும் , அம்மாவுடன் தான் போய் நிற்கும் போது அம்மா நித்திரை கொள்கின்றார் என்றும் பொய் சொல்லி கொண்டு என்னை கடைக்குச் சென்று புகையிலை வாங்கி வருமாறு அனுப்பி விட்டு தான் செத்துவிட்டார் என்றும் இறந்தவரின் மகன் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தமது வாக்குமூலங்களை பதிவு செய்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.