“நாம் மே தின நிகழ்வுகளை நடத்துவோம், எங்களை தடுக்க முடியாது” கொரோனா பரவலை கவனிக்காமல் ஜே.வி.பி தலைவர்!

“நாம் மே தின நிகழ்வுகளை நடத்துவோம், எங்களை தடுக்க முடியாது” கொரோனா பரவலை கவனிக்காமல் ஜே.வி.பி தலைவர்!

மே தின நிகழ்வினை தவிர்க்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு நாம் உடன்படப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தெரிவிக்கின்றது.

தனது கட்சி நிச்சயமாக மே தின நிகழ்வினை நடாத்தும் என கட்சித் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மே தின நிகழ்வுகள் தடை செய்த வரலாறு ஒன்று இருந்ததாகவும், அந்த வரலாற்றில் உழைக்கும் மக்களால் மே தின நிகழ்வில் பங்கேற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

மே தின பேரணிகளை நடத்த வேண்டாம் என்று தாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று அனைத்து தரப்பினரும் வெளியிட்ட அறிக்கை பொய்யானது மற்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும், அரசாங்கம் அத்தகைய முடிவுக்கு வந்தமை சுகாதார பிரச்சினைகள் காரணாமாக அல்ல அல்ல, மாறாக அரசாங்கத்தினுள் கருத்து வேறுபாட்டினாலேயேதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லையில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெசாக் தின நிகழ்வுகள் மற்றும் அனைத்து மே தின நடவடிக்கைகளையும் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.