
உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்கனவே வார இறுதி நாட்களை நுவரெலியாவில் கழிக்க ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நுவரெலியா, வலபனே மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பின் குழுத் தலைவரும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான நந்தனம்கலபொட தெரிவித்தார்.