கொழும்பில் கொரோனா தொற்று 18% வரை அதிகரிப்பு, சீரற்ற பரிசோதனைகளில் ஏராளமானோருக்கு கொரோனா உறுதி - இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கவும்!

கொழும்பில் கொரோனா தொற்று 18% வரை அதிகரிப்பு, சீரற்ற பரிசோதனைகளில் ஏராளமானோருக்கு கொரோனா உறுதி - இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கவும்!

கொழும்பு மாநகர சபை பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது கடந்த வாரம் 4% முதல் 18% வரை 14% ஆக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக, கொழும்பு நகராட்சி மன்ற பகுதியிலுள்ள வீட்டு வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆன்டிஜென் சோதனைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திரு. உபுல் ரோஹன தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டை இரு வாரங்களுக்கு முடக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் வேகமாக அதிகரித்துள்ளதோடு, சீரற்ற பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்குள், பல நகரங்கள் மற்றும் மக்கள் செறிவு கூடுதலான இடங்களில் ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post