குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான விசேட எச்சரிக்கை!

குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான விசேட எச்சரிக்கை!

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் கடமைகளைச் செய்யும்போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் இக்கால கட்டத்தில் மூடப்பட்ட இடங்களில் வேலை செய்வது ஆபத்தானது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.

நபர் ஒருவர் மூடிய இடத்திதில் குளுரூட்டப்பட்ட இடத்தில் பணியாற்றும் போது,, தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்தால் எளிதில் குறித்த நபரும் தொற்றுக்கு இலக்காகப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தகையான மூடிய இடங்களில் ஜன்னல்களையும் கதவுகளையும் முடிந்தவரை திறந்து வைக்குமாறு டாக்டர் சமரவீர மேலும் பரிந்துரைத்தார்.

பணியாளர்களிடமும், குறிப்பாக மற்றைய ஊழியர்களைச் சந்திக்கும் போதும் முகக்கவசங்களை தொடர்ந்து அணியுமாறு ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பணியாளர்கள் வேலை நேரத்திலும், வேலை செய்யும் இடங்களை விட்டு வெளியேறுவதற்கு முன்பும் தவறாமல் கைகளைக் கழுவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டில் இந்த முக்கியமான காலகட்டத்தில் தொழிலாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post