முகக்கவசம் தொடர்பில் மேல் மாகாணத்தில் சிறப்பு நடவடிக்கை!

முகக்கவசம் தொடர்பில் மேல் மாகாணத்தில் சிறப்பு நடவடிக்கை!

மேல் மாகாணம் முழுவதுமாக முகக்கவச பயன்பாட்டை கண்காணிக்க பொலிஸாரினால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் 110 பொலிஸ் பிரிவுகளில் சிவில் உடையில் உள்ள அதிகாரிகள் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் முகக்கவசத்தின் பயன்பாட்டு குறித்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த மொத்தமாக 16,803 நபர்கள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவர்களில் 1083 பேர் பொது இடங்களில் முகக்கவசம் இன்றி இருப்பது கண்டறியப்பட்டது எனறு தெரிவித்தார். அவர்களில் 3000 பேர் சரியான முறையில் முகக்கவசத்தை அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சமூக தூரத்தை பின்பற்றுவதில் சுமார் 3500 பேர் தவறியதாகவும் கண்டறியப்பட்டது.

சிறப்பு நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 5000 பேர் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் பரவி வரும் வைரஸ் மாறுபாடானது மிகவும் பரவக்கூடியதாக இருப்பதால், சுகாதார வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு டி.ஐ.ஜி அஜித் ரோஹன பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post