சற்றுமுன் முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சற்றுமுன் முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!


இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்து பயிற்றுவிப்பாளராக முத்தையா முரளிதரன் சற்றுமுன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரனான முத்தையா முரளிதரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய பிரச்சினை காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் நேற்று அவரது 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.


UPDATE:


"அவருக்கு சில இருதய சிக்கல்கள் இருந்தன, அவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு அதை சோதித்துப் பார்த்தார். இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் இதை அவசரமாக செய்ய பரிந்துரைத்துள்ளனர், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை, பீதியடைய ஒன்றுமில்லை." என்று முரளிதரனுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.