நோன்புடன் இரு சிறுசுகளை இழந்த பரிதாபம்! குளிக்க சென்று நீரில் மூழ்கி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நோன்புடன் இரு சிறுசுகளை இழந்த பரிதாபம்! குளிக்க சென்று நீரில் மூழ்கி பலி!


திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வனர்த்தம் இன்று (18) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை - ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் (14 வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (14 வயது) எனவும் தெரியவருகின்றது.


நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம் - முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.