ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு விரைவில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு?

ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு விரைவில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு?


4 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருக்கின்றது.


கடந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஜ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.


அந்தக் கலந்துரையாடலில் அவர் ரஞ்ஜனுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும்படி கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.


இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக கடந்த புதுவருடப்பிறப்பன்று, ரஞ்ஜன் ராமநாயக்கவை சிறையில் வைத்து சந்தித்தபோது சஜித் கூறியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.