அலறி மாளிகைக்கு வருகை தந்த கண் பார்வையற்ற சிறுவன்! பிரதமரின் மனைவி செய்த செயல்!
advertise here on top
advertise here on top

அலறி மாளிகைக்கு வருகை தந்த கண் பார்வையற்ற சிறுவன்! பிரதமரின் மனைவி செய்த செயல்!


கலென்பிந்துனுவெவ - பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த விழிப்புலனற்ற 13 வயதுடைய ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவனின் கண் பார்வைக்கான கோரிக்கை சமூக வலைத்தளம் ஊடாக பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவின் கவனத்தை ஈர்த்தது.

அச்சிறுவன் மீது ஏற்பட்ட ஆழ்ந்த அனுதாபத்தை தொடர்ந்து ரோஹித ராஜபக்ஷ இது தொடர்பில் தனது அன்னை, பிரதமரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

குழந்தைகள் மீது மிகுந்த கருணையும், அன்பும் மிகுந்த பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, கண் பார்வை கோரிய சிறுவனின் காணொளியை பார்த்து மிகவும் மனம் வருந்தினார்.

இச்சிறுவனுக்கு உலகைக் காண்பதற்கான அதிஷ்டம் கிட்டுமா என சிந்தித்த ஷிரந்தி ராஜபக்ஷ, ஜீவந்த ரத்நாயக்க சிறுவனை கொழும்புக்கு அழைத்து வந்தார். அது நாட்டின் மிகச் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவர்களில் ஒருவரைக் கொண்டு சிறுவனுக்கு கண் சோதனை நடத்துவதற்காகும்.

கொழும்பு கண் வைத்தியசாலையில் இச்சிறுவன் ஒரு நிபுணரின் பரிந்துரையின் பேரில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சோதனை அறிக்கையின்படி, கண் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் இச்சிறுவனின் ஒரு கண்ணுக்கு பார்வை கொடுக்க முடியும் என்று சிறப்பு மருத்துவர் முடிவு செய்தார். அதற்கு நீண்ட கால சிகிச்சை அவசியம் என நிபுணர் பரிந்துரைத்தார்.

அதற்கான சகல சுமைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு ஷிரந்தி ராஜபக்ஷ தீர்மானித்தார். அன்று விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த விழிப்புலனற்ற ஜீவந்த ரத்நாயக்க சிறுவனை சகல பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தி, பல சந்தர்ப்பங்களில் அவரை கொழும்பிற்கு அழைத்துவந்து சிகிச்சையளிப்பதற்கு பிரதமரின் பாரியார் நடவடிக்கை மேற்கொண்டார்.

சில மாதங்களின் பின்னர் ஜீவந்த ரத்நாயக்க இன்று (28) அலரி மாளிகையில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பது ஒரு கண்ணில் நூறுக்கு 30 வீதத்திற்கும் அதிகமான பார்வையுடனாகும்.

இன்று இச்சிறுவன் புத்தகங்களை வாசிப்பதற்கு முயற்சிப்பதுடன், தொலைக்காட்சி பார்த்தல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகை காண்கிறார்.

ஜீவந்தவிற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை இன்னும் நிறைவுபெறவில்லை. இன்றும் அவர் வைத்திய சிகிச்சைக்காகவே கொழும்பிற்கு வருகை தந்துள்ளார். அதன்போது தனக்கு உலகை காண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து தனது வாழ்வில் ஒளியேற்றிய ஷிரந்தி ராஜபக்ஷவை சந்தித்து வணங்கி நன்றி கூறுவதற்காகவே அலறி மாளிகைக்கு வருகை தந்திருந்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.