ஏப்ரல் 28 - நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பான 09 அறிக்கைகள்! - ஒரே நாளில அதிகளவில் பதிவான தொற்றாளர்கள் இன்று!

ஏப்ரல் 28 - நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பான 09 அறிக்கைகள்! - ஒரே நாளில அதிகளவில் பதிவான தொற்றாளர்கள் இன்று!

  • இன்று நாட்டில் 1451 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும். 
  • இன்று மேலும் 227 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். குணமடைந்த மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்தது.
  •  கொழும்பு, பொரலஸ்கமும மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸினை ஒத்தது என கண்டறியப்பட்டது
  •  சமீப காலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களுக்கு அமைய, நாடு தளுவிய முடக்கத்திற்கு அரசாங்கம் செல்லாது என பிரதமர் தெரிவித்தார். 
  • இன்று 06 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்வடைந்தது.
  •  சுகாதாரப் பணியாளர்களிடையே அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
  •  2 வது டோஸை வழங்குவதில் சுமார் 600,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளது - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமான
  •  எதிர்க்கட்சித் தலைவர் இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடலின் போது இலங்கைக்கு 300 ஐ.சி.யூ படுக்கைகளுடன் ஒரு கள மொபைல் மருத்துவமனையை பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
  •  இன்று முதல் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்கின்றன.
  •  கொரோனா நோயாளிகளை அடையாளம் காணும் பொருட்டு சுகாதார அதிகாரிகள் இன்று கொழும்பில் பல பகுதிகளில் சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொணடர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post