டுபாயில் நிர்வாணவமாக புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் குழு ஒன்று கைது!

டுபாயில் நிர்வாணவமாக புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் குழு ஒன்று கைது!


டுபாயில் வெளிப்பிரதேசத்தில் நிர்வாண புகைப்படம் எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டில் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.


இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது. அதில் மாடி முகப்பில் பெண்கள் நிர்வாணமாக காட்சி அளித்திருந்தனர்.


இதனை அடுத்தே உள்ளூர் பொலிஸார் செயற்பட்டு இவர்களை கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பதினொரு உக்ரைனிய பெண்கள் இருப்பதாக உக்ரைனிய தூதரகம் உறுதி செய்துள்ளது. இதில் ரஷ்ய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


டுபாயில் பொது இடத்தில் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதற்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்க முடியும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதனை விடவும் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் பெரும்பாலான சட்டங்கள் இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு ஓரினச் சேர்க்கை உறவுகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களில் கடந்த காலங்களிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.