அரிய வகை பொருட்களுடன் அதிரடியாக கைதான நால்வர்!

அரிய வகை பொருட்களுடன் அதிரடியாக கைதான நால்வர்!

முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2 1/2 கிலோ கிராம் நிறையுடைய திமிங்கலத்தின் ஆம்பல் என்ற பொருளுடன் அநுராதபுரம் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று காலை 2 கிலோ 500 கிராம் நிறைகொண்ட பெறுமதியான ஆம்பல் எனப்படும் அரியவகையான பொருளினை முல்லைத்தீவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்கள்.

வட்டுவாகல் பாலத்தில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதானவர்களும் குறித்த அரியவகை பொருளும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.