துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மர்மமான இலங்கை வந்தடைந்த சடலம்!

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மர்மமான இலங்கை வந்தடைந்த சடலம்!

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு நபரின் உடல் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

நேற்று (18) மாலை 4.00 மணியளவில் சடலம் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும், இறந்தவர் கம்பஹாவில் வசிக்கும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் இத்தாலியில் அப்ரினியாவில் பணிபுரிந்ததாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இத்தாலியில் பணியிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் இவர் இறந்துவிட்டார் என்றும் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார். இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவம் குறிப்பிடப்பகின்றது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.