பதுளை − பசறை கோரவிபத்து : பேருந்து சாரதியின் மோசடி செயல் - வெளியானது தகவல்!

பதுளை − பசறை கோரவிபத்து : பேருந்து சாரதியின் மோசடி செயல் - வெளியானது தகவல்!

பதுளை − பசறை − லுணுகல பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பில், பேருந்தை செலுத்திய சாரதியின் மோசடியான செயல் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தன்படி குறித்த பஸ் சாரதி, வேறொரு சாரதியின் அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி, பஸ்ஸை செலுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில காலமாக தனக்கு சொந்தமில்லாத சாரதி அனுமதிப் பத்திரத்தையே, இந்த பஸ்ஸின் சாரதி பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, பஸ்ஸின் சாரதிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post