
இதன் அடுத்த கருத்தரங்கு, அம்பாறை - சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட 5 ஆம் கொலனி கிராமத்தில் தாருல் ஹிக்மா கேட்போர் கூடத்தில் (02) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக, மனநல மருத்துவர் (Psychiatrist) டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கிராமத்தின் பல்கலைக் கழக மாணவர்கள், உலமாக்கள் வழிகாட்டலோடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் கற்கை நெறிக்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மினுவாங்கொடை யாழ் நியூஸ் நிருபர் ஐ. ஏ. காதிர் கான்