இன்டர்நெட்டை கொலை செய்ய திட்டம்? நபரொருவர் அமெரிக்காவில் கைது!

இன்டர்நெட்டை கொலை செய்ய திட்டம்? நபரொருவர் அமெரிக்காவில் கைது!


இணையத்தை (இன்டர்நெட்) கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


சேத் ஆரோன் பென்ட்லி (Seth Aaron Pendley) எனும் 28 வயதான இளைஞரே இவ்வாறு FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த இளைஞர் வேர்ஜீனியா மாநிலத்திலுள்ள அமேஸான் டேட்டா நிலையம் ஒன்றை வெடிவைத்து தகர்ப்பதற்கு திட்டமிட்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 70 சதவீதமான இணையம் கொல்லப்பட்டுவிடும் என அவர் நம்பினாராம்.


மாறுவேடமிட்டிருந்த FBI புலனாய்வு அதிகாரி உத்தியோகத்தர் ஒருவரிடம் செயல்படாத வெடிபொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர் சேத் ஆரோன் பென்ட்லி கடந்த வாரம் கைது செய்யப்பட்டுளளார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பென்ட்லியின் பிரதான இலக்கு அமேஸான் வெப் சேர்வர் வலையமைப்பை சேதப்படுத்துவதாக இரந்தது என புலனாய்வாளர்கள் தெரவித்துள்ளனர்.


சுமார் 70 சதவீதமான இணையத்தை இயக்கும் 24 கட்டடங்கள் உள்ளதென பென்ட்லி நம்பியிருந்தார். அவற்றில் CIA மற்றும் FBI ஆகியவற்றினால் பயன்படுத்தப்படும் இடங்களும் அடங்கும் என்பது அவருக்கு எதிரான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேத் ஆரோன் பென்ட்லி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.