புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை!

புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை!


ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நாளை (12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து  இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம் இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பலரும்  இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


-ஐ. ஏ. காதிர் கான்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.