ஈஸ்டர் தாக்குதல் மதத் தீவிரவாதம் அல்ல; அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தவே தாக்குதல்கள் நடத்தப்பட்டன! -கர்தினால் மெல்கம்

ஈஸ்டர் தாக்குதல் மதத் தீவிரவாதம் அல்ல; அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தவே தாக்குதல்கள் நடத்தப்பட்டன! -கர்தினால் மெல்கம்


அரசியல் சக்தியை வலுப்படுத்தவே ஈஸ்டர் தாக்குதல்களை ஒரு குழுவினரை பயன்படுத்தி நடத்தப்பட்டது என்று கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்தார்.


250 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பலியானவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை ஆசிர்வதிக்க இன்று (18) பொரளையில் உள்ள பொது கல்லறையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கார்டினல் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார்.


"எங்கள் சகோதரர்கள் தாக்கப்பட்டது மத தீவிரவாதத்தால் அல்ல, மாறாக தங்கள் அரசியல் சக்தியை வலுப்படுத்துவதற்காக தாக்குதல்தாரிகளை பயன்படுத்திக் கொண்ட ஒரு அரசியல் குழுவினரால்" என்று கார்டினல் தொடர்ந்து கூறினார்.


மேலும் "இதில் நாம் காண்பது மதம் மேல் இருக்கும் வெறி அல்லது ஒரு மதத்தின் மீதான அன்பு அல்ல, மாறாக சில சக்திகள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை பலப்படுத்துவதற்கான முயற்சிகள்" என்று அவர் கூறினார்.


கார்டினல் ரஞ்சித் இன்று ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சிலர் அடக்கம் செய்யப்பட்டுள்ள பொரளை மற்றும் மாதம்பிட்டிய கல்லறைகளில் இரண்டு நினைவுச் சின்னங்களை திறந்து வைத்தார்.


-எம்.எம் அஹ்மட்

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.