மேலும் ஒரு இறக்குமதிக்கு அமுலாகும் அதிரடி தடை!

மேலும் ஒரு இறக்குமதிக்கு அமுலாகும் அதிரடி தடை!

இலங்கைக்கு ஜவுளி துணி இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதாக பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை வர்த்தமானியில் இருந்து நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அதன்படி, அனைத்து ஜவுளி துணிகள் மற்றும் அச்சிடப்பட்ட பற்றிக் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை மூலம் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று அமைச்சர் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மஞ்சள்,வாசனைத்திரவியங்கள் மற்றும் பாம் ஓயில் என்பவற்றுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post