அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏழாவது பொதுக்கூட்ட நிகழ்வு!

அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏழாவது பொதுக்கூட்ட நிகழ்வு!

அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏழாவது பொதுக்கூட்டம் கல்முனைய பிரதேசத்தில், ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ஸாதிக் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

 இந்நிகழ்வில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர்கள், பெண்கள் பிரிவின் தலைவிகள், பிரதிநிதிகள் மற்றும் இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முதற்கட்டமாக அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால், கடந்த காலங்களில் முஸ்லிம் மஜ்லிஸ்கள் எதிர் நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான தெளிவுகள் மற்றும்  இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழகங்களிலுமுள்ள முஸ்லிம் மஜ்லிஸ்களாலும் செயற்படுத்த வேண்டிய வகையில் கொள்கை வகுத்து வெளியிடுவதாக கூறப்பட்ட விடயம் குறித்து இறுதிக் கட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு  இக்கொள்கையை மிக விரைவில் வெளியிடுவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது. 

பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் இவ்வருடம்  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுக்களின் அறிமுகமும், மஜ்லிஸ்களின் கடந்தகால செயற்பாடுகள்,தற்காலத்தில் (கொவிட்-19 காலப்பகுதியில்) மஜ்லிஸ்கள் எதிர்நோக்கும் சவால்கள் எதிர்கால நடவடிக்கைகள், எதிர் வரும் ரமழான் மற்றும் பல்கலைக்கழகங்களை மீளத்திறத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. 

கடந்த காலங்களில் AUMSAவானது பிராந்திய ரீதியான அபிவிருத்திகளை கருத்திற் கொண்டு செயற்படும் எனக்கூறியதன் பிரகாரம் இப் பொதுக்கூட்டம் கிழக்குப் பிராந்தியத்தில் நடைபெற்றது. 

அந்த வகையில், கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மஜ்லிஸ்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும், இப் பிராந்திய இளங்கலை பட்டதாரி அமைப்புக்களின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களும் இதில் பங்குபற்றினர். இவர்களுடன் கலந்தாலோசித்ததற்கமைய பிரச்சினைகள் இனங்காணப்பட்டு இப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திகான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களது எதிர் கால வெற்றிக்கு AUMSA பங்களிப்பினை வழங்கும். 

இறுதியாக அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் நடைபெறவிருக்கும் வருடாந்த பொதுக்கூட்டம் (2021) தொடர்பாகவும், பிரதானமாக, AUMSAவின் யாப்பில்  கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டதோடு முக்கியமான முடிவுகளும்  எடுக்கப்பட்டன. 

இக்கூட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு  உறுதுணையாக இருந்த அனைத்து AUMSAவின் நிர்வாக அங்கத்தவர்கள், ஏனைய இளங்கலை பட்டதாரிகள் அனைவருக்கும் AUMSAவின் நிர்வாகம் சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.