பொலிஸ் ஜீப்பினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான தேரருக்கு பிணை!

பொலிஸ் ஜீப்பினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான தேரருக்கு பிணை!


கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸ் ஜீப் வண்டியை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


இந்நிலையில், இது குறித்து இன்று (08) மாலை வரை இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post