கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பிரித்தானிய பெண்! கோடியில் ஒரு சம்பவம்!

கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பிரித்தானிய பெண்! கோடியில் ஒரு சம்பவம்!


பிரித்தானியாவில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போது மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். மருத்துவ உலகில் இதனை சூப்பர் ஃபெட்டேஷன் (Superfetation) என்று அழைக்கின்றனர்.


இங்கிலாந்தின் பாத் நகரைச் சேர்ந்த ரெபேக்கா ராபர்ட்ஸ் (39) சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாகிவிட்டார். அவர் தனது கணவருடன் உறவு கொண்ட சில நாட்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அவர் கடந்தாண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.


ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


சூப்பர் ஃபெட்டேஷன் போன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டாவது குழந்தை கர்ப்ப காலத்தில் இறக்கிறது. ஆனால் ரெபேக்கா ராபர்ட்ஸுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.-மெட்ரோ


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.