மருமகனை கொலை செய்து சடலத்தை வீதியில் வீசிச் சென்ற சந்தேகத்தில் மாமனார் கைது!

மருமகனை கொலை செய்து சடலத்தை வீதியில் வீசிச் சென்ற சந்தேகத்தில் மாமனார் கைது!


கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு (15) மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் மருமகனை மாமனார் மருமகனை தடியொன்றினால் தாக்கியுள்ளார்.


காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.


கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த 35 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில், தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபரான மாமா தனது முச்சக்கர வண்டியில் காயமடைந்த வரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதன்போது அம்பியூலன்ஸ் வண்டி இடையில் வந்துள்ளது. அதில் வந்தவர்கள் காயமடைந்தவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துள்ளளளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதன் பின்னர் தாக்குதலை நடத்தியவர் சடலத்தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நுவரெலியா மாவட்ட நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதைனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


-க.கிஷாந்தன்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.