பெண் இனத்தை இழிவாக பேசியதாக ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெண் இனத்தை இழிவாக பேசியதாக ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


பெண் இனத்தை இழிவாக பேசிய ஜீவன் தொண்டமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி ஹட்டன் நகரில் நாளை (18) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் மல்லியப் பூ சந்தியில் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொட்டகலை சி.எல்.எப் இல் இடம்பெற்ற கூட்டமொன்றில் மலையக பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியமையை கண்டித்து பெண்கள் அமைப்புகளும் ஊடகங்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.


இந்நிலையில், பெண்களை தகாத வார்த்தையில் பேசிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலையக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி குறித்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


-சிவா ராமசாமி


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.