இலங்கை பொருளாதாரத்தின் திருப்புமுனையை சீர்குலைக்க பல்வேறு தரப்பினர் முயற்சி!

இலங்கை பொருளாதாரத்தின் திருப்புமுனையை சீர்குலைக்க பல்வேறு தரப்பினர் முயற்சி!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கதைத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஊடக சந்திப்பில் பகிரங்கமாகக் கூறியது தார்மீகமானது அல்ல என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோட்டே ரஜமஹா விகாரையில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் விஜேதாச ராஜபக்ஷவுக்கு பிரச்சினைகள் இருந்தால், அதனை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இருக்கலாம். எனினும் அவர் அப்படிச் செய்யவில்லை.

துறைமுக நகரத்தில் பாதுகாப்பு பொறுப்பு இலங்கை பொலிஸாருக்கே இருக்கின்றது. அந்த நிலத்தில் உலங்குவானூர்தியைத் தரையிறக்கக் கூட அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படியான பின்னணியில் விஜேதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விடயங்கள் தவறானவை. துறைமுக நகரத் திட்டம் என்பது இலங்கை பொருளாதாரத்தின் திருப்புமுனை.

அதனை ஆரம்பத்திலிருந்தே சீர்குலைக்க பல்வேறு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், விஜேதாச ராஜபக்ஷ செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகம் உள்ளது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.