பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்!
advertise here on top
advertise here on top

பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்!

ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் வேளையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன், கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 


தமிழ் – சிங்கள புதுவருட பிறப்புக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இந்நிலையில் மக்கள் தற்போது புதுவருட கொண்டாட்டத்துக்கான பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் முகக்கவசம் அணிவதுடன், கைகளை சுத்தம் செய்துக் கொள்ளல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற ஒழுங்கு விதிகளை பின்பற்றுவதுடன், பொதுமக்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.


இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று (04) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,409 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.


இதேவேளை , இந்தக் காலப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களினால் மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கமைய வீட்டை விட்டு வெளியேறும் போது, கொள்ளையர்களிடமிருந்து தமது பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதன்போது தங்க நகைகள் அணிந்து செல்பவர்கள் மேலும் அவதானத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்தும் கைப் பைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கொள்ளையர்கள் பல்வேறு முறைகளை கையாண்டு அவற்றை கொள்ளையிடுவதற்கு வாய்ப்புள்ளது.


மேலும், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட வாகன கொள்ளைகளும் தற்போது பதிவாகி வருகின்றன. அதனால் வாகனங்களில் செல்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் போது அதனை பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும் என்றார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.