17 வயது மகளை வயது கூடிய ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முயற்சி; யுவதி ஒருவர் குத்திக்கொலை! -கலேவெல

17 வயது மகளை வயது கூடிய ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முயற்சி; யுவதி ஒருவர் குத்திக்கொலை! -கலேவெல


கலேவெல – பட்டிவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 


நபரொருவரின் 17 வயது மகளை வயது கூடிய ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சித்தமையின் காரணமாகவே இந்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறியதாவது, 


கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிவெல பகுதியில் இன்று (04) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.


அதற்கமைய கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர், சிறுவர் காப்பகத்தில் வளர்ந்த தனது 17 வயது மகளை, உயிரிழந்த யுவதியின் வீட்டில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளார். சித்திரை புத்தாண்டின் காரணமாக அவர் தனது மகளை குறித்த யுவதியின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.


இந்த சந்தர்ப்பத்தில் 17 வயது சிறுமியின் தந்தைக்கு தெரியாமல் அவரை வயதில் மூத்த நபர் ஒருவருக்கு திருமணம் செய்ய யுவதி திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே சந்தேக நபர் யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


சந்தேக நபரை கைது செய்துள்ள கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post