உயர் தர பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட தகவல்!

உயர் தர பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட தகவல்!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள்  தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டார்.


இதேவேளை, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது.


அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை 23 நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. மேலும் 4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.


-அரசாங்க தகவல் திணைக்களம்

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.