ஜனாதிபதி கவலைகள் இருப்பின் தனது எம்.பிக்களிடம் தொலைபேசியில் உரையாடுவது தவறில்லை! -மஹிந்தானந்த

ஜனாதிபதி கவலைகள் இருப்பின் தனது எம்.பிக்களிடம் தொலைபேசியில் உரையாடுவது தவறில்லை! -மஹிந்தானந்த


நாட்டின் ஜனாதிபதியொருவர், அரசாங்க விவகாரத்தில் ஏதேனும் கவலைகள் இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ஷ பகிரங்கமாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அதற்கு விளக்கமளிக்கும் விதமாக மஹிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.


உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு தொடர்பில், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ஷ நேற்று செய்தியாளர் சந்திப்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.


இதை தொடர்ந்து இன்று காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.


இதை தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,


முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதாகவும், அரசாங்கத்திற்குள் சில சிக்கல்கள் எழும்போது அவர்கள் அதே செயல்முறையைப் பின்பற்றியதாகவும் குறிப்பிட்டார்.


இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி, தொலைபேசியில் விஜயதாஷ ராஜபக்ஷவை தொடர்பு கொண்டு பேசினார்.


ஜனாதிபதிக்கும் ஒரு அரசாங்க எம்.பி.க்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியாகின்றன.


அரசாங்கத்தின் திட்டத்தை நாசப்படுத்தும் நோக்கங்களைக் கொண்ட பிற தரப்புக்கள் இதன் பின்னணியில் இருப்பதாக நம்புவதாக தெரிவித்தார்.


எந்தவொரு அரசியலமைப்பு விதிகளையும் மீறி உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என்றும் அவர் கூறினார்.


இந்த செயல்முறையை முன்னெடுப்பதற்கு முன் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்காக காத்திருப்பார்கள் என்று அவர் கூறினார்.


கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பாக தோரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும், கொழும்பு துறைமுக நகரம் இலங்கைக்கு ஒரு திருப்புமுனையாகும், இது நாட்டை சிங்கப்பூருக்கு இணையான நிலைக்கு உயர்த்தும் என்று அமைச்சர் கூறினார்.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.