நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 34 மாத குழந்தையை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 34 மாத குழந்தையை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!


நீர்கொழும்பு தலஹேன பகுதியில் இருந்து 2 வருடம் 10 மாத வயதுடைய ஒரு குழந்தை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.


ஒரு அறிக்கையை வெளியிட்ட என்.சி.பி.ஏ, காணாமல் போன பெண் குழந்தையின் தாய் இது தொடர்பாக NCPA வுக்கு ஆணையத்தில் புகார் அளித்ததாக கூறினார்.


சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் NCPAவை அதன் அவசர சேவை இலக்கமான 1929 அல்லது தொலைபேசி எண் 0112 778911 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.