அவிசாவளையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! ஒருவர் பலி, இருவருக்கு காயம்!

அவிசாவளையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! ஒருவர் பலி, இருவருக்கு காயம்!


அவிசாவளை பகுதியில் இன்று (02) மாலை மர்மபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான மூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியின் மாதொல பகுதியிலுள்ள இரும்பு பொருள் சேகரிப்பு நிலையமொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிந்திய தகவலின்படி எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post