முகநூல் ஊடாக அடிப்படைவாதிகளுடன் தொடர்பு! காத்தான்குடியில் ஒருவர் கைது!

முகநூல் ஊடாக அடிப்படைவாதிகளுடன் தொடர்பு! காத்தான்குடியில் ஒருவர் கைது!


அடிப்படைவாத முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே நேற்று (02) மாலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மூன்று மாதகால பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தராகக் கடமையாற்றிவரும் 38 வயதுடைய குறித்த நபர், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாதக் கொள்கைகளை முகநூலில் தரவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.