துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது!

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது!


ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் தீவிரவாத பிரசாரங்களை மேற்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதிகளில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் 


இவர்களிடமிருந்து மடிக்கணினிகளும் கைப்பற்றப்படடுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகளை நிபுணர்கள் ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.


இந்த மடிக்கணினிகளில்  தீவிரவாதக் கொள்கையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல படங்களும் ஆவணங்களும் காணப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post