கொரோனா மரணங்கள் அதிகரித்தது; அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கை!

கொரோனா மரணங்கள் அதிகரித்தது; அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கை!


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 80 வயது பெண்ணொருவர், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 67 வயது ஆணொருவர், யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 71 வயது ஆணொருவர், பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 77 வயது ஆணொருவர் மற்றும் கொழும்பு 10ஐ சேர்ந்த 71 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post