ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலுக்கு புது முகத்தை முன்னிலைப்படுத்த ரணில் தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலுக்கு புது முகத்தை முன்னிலைப்படுத்த ரணில் தீர்மானம்!


ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய முகமொன்றை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.


தேசிய பட்டியல் உறுப்புரிமையை பெற்று பாராளுமன்றம் செல்ல மறுத்த ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு தீர்மானத்தை மதித்து பாராளுமன்றம் செல்ல கடந்த மாதம் விருப்பம் தெரிவித்த போதும் இறுதியில் அந்த திட்டத்தை அவர் கைவிட்டுள்ளார்.


கடந்த 8 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிரேஸ்ட தொழிற்சங்கவாதியும் பொருளாதார நிபுணருமாகிய ஒருவரை நியமிக்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.


நாட்டில் தற்போது தொழில்துறை ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால் தொழில் மற்றும் பொருளாதார துறை நிபுணர் ஒருவரை பாராளுமன்றுக்கு அனுப்ப ரணில் முடிவு செய்துள்ளார்.


மேலும் அந்த நபர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.