பஸ்களில் இன்று முதல் சிவில் உடையில் பயணிக்கவுள்ள பொலிஸார்?

பஸ்களில் இன்று முதல் சிவில் உடையில் பயணிக்கவுள்ள பொலிஸார்?


கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்லும் பஸ்களில்  இன்று (05) முதல் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பயணிக்கவுள்ளனர்.


பஸ் சாரதிகளில் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாட்டில் நேற்று (04) வாகன விபத்துகளில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகளவானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என தெரிவிக்கப்படுகின்றது.


பொலிஸாரின் தகவலுக்கு அமைய ஏப்ரல் 10 முதல்  20ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாட்டில் அதிக விபத்துகள் பதிவாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post