ஒன்லைன் மீட்டிங் நடத்துவோருக்கு எச்சரிக்கை! தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த சம்பவம்!

ஒன்லைன் மீட்டிங் நடத்துவோருக்கு எச்சரிக்கை! தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த சம்பவம்!


தென் ஆபிரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி, ஒன்லைன் ஜூம் கோலில் நிர்வாணமாக தோன்றிய சம்பவத்தால் மீட்டிங் நடந்துக்கொண்டிருந்த போதே, நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சோலிலே எண்டேவ் எனும் அந்த தலைவர், மிகவும் வெட்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதலே ஒன்லைன் மற்றும் வீடியோ கோல் மூலம் மீட்டிங் செய்வது என்பது இயல்பாக மாறிவிட்டது. இந்த கூட்டங்கள் மற்றும் கருந்தரங்குகள் வேலையை செய்வதில் மக்களுக்கு உதவியாக இருக்கின்றன. அதே சமயம் ஜூம் மீட்டிங் பல தவறுகள் நடக்கவும் காரணமாக அமைகின்றன.


சமீபத்தில் ஒரு தென் ஆபிரிக்க தலைவர் பாரளுமன்றத்தின் ஜூம் மீட்டிங்கின் போது அதில் அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக தோன்றியதை அடுத்து மிகவும் வெட்கப்பட்டார்.


சோலிலே எண்டேவ் என்பவர் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். கடந்த மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட 19 இறப்புகள் குறித்து பேசுவதற்காக தென்னாப்பிரிக்காவில் உள்ள 23 தலைவர்களுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டார்.


ஆனால், அவர் வீடியோ கால் பேசிக் கொண்டிருப்பதை அறியாத அவரது மனைவி நிர்வாணமாக அவருக்கு பின்னால் தோன்றியுள்ளார். அந்த சமயத்தில் அவர் ஈஸ்டர்ன் கேப் மருத்துவர்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பது குறித்து விளக்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது மனைவி நிர்வாணமாக தோன்றியதை கண்ட மற்றவர்கள் சிரிக்க துவங்கினர். இதை கண்ட குழுவின் தலைவரான ஃபெய்த் முத்தாம்பி என்பவர் தலையிட்டு கூட்டத்தை இடை நிறுத்தினார்.


”இன்கோசி உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் சரியாக ஆடை அணியவில்லை. அனைவரும் அதை பார்த்துக்கொண்டு உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் ”தயவு செய்து நீங்கள் ஒரு கூட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா? இல்லையா? அது எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறது” என்று அவர் கூறினார். மேலும் ஜூம் சந்திப்பின்போது இதுப்போன்ற சம்பவம் நடப்பது இது முதல் தடவையல்ல என்று அவர் தொடர்ந்து கூறுகிறார்.


“நாங்கள் உங்களை ஆன்லைனில் சந்திக்கும்போதெல்லாம் இதை பார்க்க வேண்டி உள்ளது. முதலில் நீங்கள் டிவியில் நேரலையில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று முத்தாம்பி மேலும் கூறியுள்ளார்.


அதன் பின்னர் தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு எண்டேவ் மன்னிப்பு கேட்டார். “நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் கேமிராவில் கவனம் செலுத்தியதால் பின்னால் எதையும் நான் கவனிக்கவில்லை. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த ஜூம் ஆன்லைன் வீடியோ கால் தொழில்நுட்பம் எங்களுக்கு மிகவும் புதியது. 


எனவே இதுக்குறித்து முழுதாக எனக்கு தெரியாது. இந்த மீட்டிங் இரவு 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என எண்டேவ் கூறினார். “இரவு 10 மணிக்கு பிறகு எனது மனைவி குளியலறையை பயன்படுத்துவதற்காக வந்தார். நான் வீடியோவில் பேசிக் கொண்டிருந்ததை அவர் அறியவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.