அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை பெற்றுக் கொண்டதை அடுத்தே இந்த ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.